இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பில் அமெரிக்க அறிக்கையிலுள்ள அதிர்ச்சி தகவல்கள்..
அமெரிக்க வெளியுறவுத்துறை அண்மையில் இலங்கையின் தற்போதைய முதலீட்டுச் சூழல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித முன்னோக்கிய செயற்பாடுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
2026 Sri Lanka Investment Climate Statementயில் இலங்கையின் முதன்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் அரச நிறுவனமான இலங்கை முதலீட்டு சபை (BOI) தொடர்பில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அச்சபையின் தலைவர் உள்ளிட்ட பணியாளர்கள் தீர்மானங்களை எடுப்பதில் ஏற்படும் தாமதங்கள், அதிகாரத் தடைகள், அரசியல் தலையீடுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் கொண்ட சூழலிலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அச்சபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட போதிலும் செற்பாடுகள் முடங்கிவிடாமல் முன்னோக்கி கொண்டு செல்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்
சீனாவின் சைனோபெக் நிறுவனம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை அம்பாந்தோட்டையில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கத்திடம் கையெழுத்திட்ட போதிலும் அதற்கான வேலைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்தில் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) கலைக்கப்பட்டு அதற்காக புதிதாக ஐந்து தனி நிறுவனங்களை ஏற்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) இன்றும் கலைக்கப்படவில்லை். 2024 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் புதிதாக நிறுவப்படவிருந்த ஐந்து நிறுனங்களான இலங்கை பொருளாதார ஆணைக்குழு,
இலங்கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வர்த்தக அலுவலகம், தேசிய உற்பத்திச்சார் ஆணைக்குழு மற்றும் இலங்கை மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகும்.ஆனால் இதுவரை நிறுவப்படவில்லை என தெரியவருகிறது.
சைனோபெக் நிறுவனத்தின் முதலீடு
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் பிரத்தியேக சேவைகளை வழங்குவதற்காக one-stop shop என்ற செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் முதலீட்டு சபையால் முடியாமல் போயுள்ளது.
3.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்ட சீனாவின் சைனோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தங்களை 2025 ஜனவரியில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க உடன்பாட்டுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதமாகியும் தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது முதலீட்டு சபை (BOI) கலைக்கப்படுவது மற்றும் அமெரிக்க அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் குறித்தும் வினவுவதற்காக அம்மன்றத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத்தை தொடர்புகொள்ள முயன்றபோதிலும், முயற்சி பலனளிக்கவில்லை.
இதனிடையே, முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்ப்பாடு குறித்து வினவுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri