ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசீம் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசீமை (Kabir Hasim) நியமிப்பற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) அக்கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா இடையிலான முறுகல் நிலையின் உச்சக்கட்டமாக சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி கபீர் ஹாசீமை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சரத் பொன்சேகா வகித்து வரும் களனி தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா நியமிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதவி நீக்கம்
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீக்கப்படவுள்ளார்.
மேலும், கட்சி தலைமை மீதான விமர்சனம், கட்சி தீர்மானத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆளுங்கட்சியுடனான உறவு உள்ளிட்ட காரணங்களை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து எதிர்வரும் 21ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது ரணிலுடன் பொன்சேகா மேடையேறவுள்ளார் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |