பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகளே பாதுகாக்கின்றனர் : அனுர
பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுவினரை போஷித்து, அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அரசியல்வாதிகளே வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவு
பல ஆண்டுகளாக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப் பொருளற்ற மற்றும் குற்றச் செயல்களற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக்குழுவினரும் குற்றவாளிகளும் மீண்டும் நாட்டில் தலைதூக்கத் தொடங்கியுள்ளதோடு, இவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கொள்கையில் ஆட்சி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு உயர் அதிகாரிகள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களில் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |