ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை: துஷார இந்துனில்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை, எமது கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்தின் பக்கம் செல்லமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது (04.04.2023) அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பாதுகாப்பாக இருக்கின்றது. எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று கூறப்படுவது இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும்.
இலங்கை அரசாங்கம்
ஐக்கிய மக்கள் சக்தியைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதற்காகத்தான் அரச தரப்பினர் எமது கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த அரசாங்கத்துடன் இணையமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
