இலங்கையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 680 பேர் கைது!
இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 5 ஆயிரத்து 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(29) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குற்றச் செயல்கள்
இதன்போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 20 பேரும், சந்தேகத்தின் பேரில் 815 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 315 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 210 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 86 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 56 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4 ஆயிரத்து 178 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri