ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில! இனவாத கருத்தின் விளைவு
தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தன்னை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைப்பதன் மூலம், தங்களை விமர்சிப்பதை நிறுத்த முடியும் என அரசாங்கம் நினைப்பதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
இனவாத கருத்து
குற்றப் புலனாய்வுத் துறை, கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கம்மன்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஒகஸ்ட் 12 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில் கூறியிருந்தனர்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பல்வேறு சமூகங்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
