ஐ.நாவில் உள்ள ஈழத் தமிழர்களின் சாட்சியங்களுக்கு ஆபத்து
அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
அவரின் வருகைக்கு முன்பிலிருந்தே, அதாவது 2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்தே ஐ.நா இலங்கையை பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள், மனித அவலங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஐ.நா சேகரித்து வந்துள்ளது.
குறிப்பாக, ஈழத்தமழிர்கள் மற்றும் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், கொடூரங்கள் குறித்து முக்கிய ஆவணங்களை ஐ.நா ஆராய்ந்து வந்தமை தொடர்பில் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அண்மையில் செம்மணியை பார்வையிட்டிருந்த வோல்கர் டர்க், சர்வதேச விசாரணையை விட உள்ளக நெறிமுறை குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இது ஈழத்தமிழர்கள் மத்தியில் ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான நம்பிக்கையை கேள்விக்குரியதாக மாற்றியது எனலாம்.
இதற்கிடையில், ஐ.நா இலங்கை பற்றி சேகரித்து வைத்துள்ள, அதாவது ஈழத் தமிழர்களின் சாட்சியங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் குறித்து பல உண்மைகளை விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
