தம்புள்ளையில் இயங்காத களஞ்சியசாலைக்கு பல மில்லியன் கணக்கில் மின்சார கட்டணம்
தம்புள்ளை விவசாய குளிர்பதனக் களஞ்சியசாலை, செயல்படாத போதிலும் ரூபா. 8.4 மில்லியன் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் குறித்த தம்புள்ளை விவசாய குளிர்பதனக் களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில், உதய கம்மன்பில தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் குறித்த களஞ்சியசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, மின்சாரம் செலுத்தாததால் அதற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இராஜதந்திர உறவு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவால் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கமைய இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இந்த விவசாய குளிர்பதன் களஞ்சியசாலை, ஏப்ரல் 5 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதற்காக அரசாங்கத்தை விமர்சித்த உதய கம்மன்பில, சர்வதேச பங்காளிகளை தவறாக வழிநடத்துவது இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் என்று எச்சரித்துடன் இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




