கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனம் ஸ்தம்பிதம்
கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் சுமார் பத்தாயிரம் விமானப் பணியாளர்கள் இன்று அதிகாலை வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகளவில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் தொடங்கியதாக கனேடிய பொது ஊழியர் தொழிற்சங்கத்தின் (CUPE) பேச்சாளர் ஹக் பவுலியோட், தெரிவித்துள்ளார்.
இதனால் விமான சேவை நிறுவனம் தனது விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது.
அதே நேரத்தில் எயார் கனடா, பணியாளர்களை விமான நிலையங்களில் இருந்து தடுக்கும் “லாக்அவுட்” உத்தியை அறிவித்தது.
இந்த நிறுத்தம் நாளாந்தம் 130,000 பயணிகளை பாதிக்கும், இதில் 25,000 கனடியர்கள் வெளிநாடுகளில் பாதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri