சாகல மற்றும் வஜிரவால் அதிருப்தியடைந்துள்ள ஐதேகவினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன(Vajira Abeywardena) மற்றும் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) ஆகியோர் தொடர்பில் கடும் அதிருப்தி நிலவுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வஜிர அபேவர்த்தனவும், ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த சாகல ரத்நாயக்கவும் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஐதேகவின் பின்னடைவு
அதன் காரணமாக கட்சியை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத நிலையில் கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாது பின்னடைவைச் சந்தித்திருந்தது.
தற்போது கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வஜிர அபேவர்த்தன மற்றும் சாகல ரத்நாயக்கவை அகற்ற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
