பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை மக்கள் சார்பாக தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறும்போது, பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மாறுபட்ட நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
நாட்டு பற்று கொண்டவர்களே நாட்டை ஆளல்
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்வதை தாம் எதிர்ப்பதாகவும், நாட்டைப் பற்றி அக்கறையுள்ள, சிந்திக்கும் இலங்கையர்களே இலங்கையை ஆள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இரட்டைக் குடிமகனுக்கும் இலங்கையை பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தில் வேறு நாட்டிற்குச் சென்று, அவர்கள் விரும்பிய வழியில் செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் பற்றி அரசியல்வாதிகளின் கருத்து
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலை இல்லாமல் போனமைக்கு 22வது திருத்தம் காரணமாக அமைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கோபத்திற்கு ஆளாகியுள்ள ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பசில் ராஜபக்ச
இருப்பதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.