நாட்டை அபிவிருத்தி செய்ய ஐ.தே.க. தலைவர்கள் திட்டம் - கட்சியின் பொதுச்செயலர் அறிவிப்பு

By Rakesh May 01, 2023 07:48 PM GMT
Report

2048 இல் இலங்கையை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர்" - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'2048 வெல்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சி

"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்த மே தினக் கூட்டம் நடைபெறுகின்றது. சவால்கள் எதிர்கொள்ளும் போது அதிகமான அரசியல் கட்சிகள் அவற்றில் இருந்து தப்பித்துச் செல்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு சவால்களை வென்றெடுத்துள்ளது.

சவால்களை ஏற்று சவால்களை வெல்வதற்கு வரலாற்றில் எமது தலைவர்களுக்கு எமது கட்சி தலைமைத்துவம் வழங்கியது. அன்று தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு இந்நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி தராததால் அவர் மக்களை வெறுக்கவில்லை. சகித்துக்கொண்டு நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.

2001ல் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நாட்டைப் பொறுப்பேற்றார். பொருளாதார வளர்ச்சி மறை 1.5 இற்குச் சரிந்திருந்த நிலையில் மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து முன்னேற்றினார்.

2015 இல் கூட பிரதமராக நாட்டை சரியாக நிர்வகித்து நாட்டை அவர் அபிவிருத்தி செய்தார். 2022 ஆம் ஆண்டு வங்குரோத்தடைந்த அரசை சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தச் சவால்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2048 இல் இலங்கையை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை இல்லை. இவ்வளவு தியாகம் செய்யும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் வேறு யாரும் இல்லை.

2048 இற்குள் கண்டிப்பாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்." - என்றார்.

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US