ஐ.நா கூட்டத்தில் பங்கேற்ற அலி சப்ரியின் மகன்
ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராக தனது மகனை பங்கேற்க அனுமதித்த முடிவை அமைச்சர் அலி சப்ரி ஆதரித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், தமது விரிவான பணிச்சுமைக்கு முழுமையான ஆராய்ச்சி, எழுத்து மற்றும் நுணுக்கமான தயாரிப்புகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஊதியம் மற்றும் தன்னார்வ பங்களிப்பாளர்கள் உள்ளனர்.
வெளியுறவு அமைச்சர்
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தமது வேண்டுகோளின் பேரில் தற்காலிக, தன்னார்வ அடிப்படையில் தமது மகன் தனக்கு ஆராய்ச்சி உதவியாளராகவும், வரைவு எழுத்தாளராகவும் உதவியிருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் அவர் தனது படிப்பை தொடர்வதால், ஐக்கிய நாடுகளின் அமர்வுகளின் போது, சில நாட்களுக்கு தனது நேரத்தையும் நிபுணத்துவத்தையும், தமக்கு வழங்க முன்வந்ததாக வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த முக்கியமான ஈடுபாடுகளுக்கு தம்மை தயார்படுத்துவதற்கு அவருடைய
பங்களிப்புகள் தமக்கு உதவின என்பதை ஒப்புக் கொள்வதில் தாம்
மகிழ்ச்சியடைவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தன்னார்வம்
முக்கியமாக, இந்த ஈடுபாடுகளில் ஈடுபட்டதற்காக அல்லது வேறு எந்த நேரத்திலும் அவர் சார்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சகமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஒரு ரூபா கூட செலவழிக்கவில்லை.
அவரது பங்களிப்பு முற்றிலும் தன்னார்வமானது என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |