நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்படி குறிப்பிட்டுள்ளனர்.
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை, பொது நிதி முகாமைத்துவ முறைமைகளுடன் ஒருங்கிணைப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
இந்த கலந்துரையாடலில், வரவு செலவுத் திட்ட இடைவெளிகளைக் குறைப்பதற்காக புதுபிக்கப்பட்ட தரவுகளுடன் கூடிய பயனுள்ள அடிப்படையை வழங்குதல், சமூகத் துறையுடன் தொடர்புடைய செலவினங்களைப் பாதுகாப்பதற்காக மிகச் சிறந்த வழிமுறைகளை அறிமுகப்படுத்தல், நிதி இடைவெளிகளைக் கண்டறிந்து, அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் கொள்கை ஒருங்கிணைப்பை மேம்படுத்தல் மற்றும் பொது முதலீடுகளில் உள்ள பணத்திற்கு அதிக மதிப்பைப் பெற உதவுதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக பொது நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், வளங்களைத் திரட்டுதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கென முறையான திட்டமிடலை வழங்குவதன் மூலம் அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இலக்குகள்,காலநிலை பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்ட இலக்குகள் மூலம் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இதனால் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் நிலைபேண்தகு அபிவிருத்திச் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது மற்றும் உதவிப் பணிப்பாளர் நதீகா அமரசிங்க, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜித அபேகுணசேகர மற்றும் பணிப்பாளர் சஜன சூரியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri