மருத்துவர்களின் ஆட்சேர்ப்பில் தொழிற்சங்க தலையீடு: சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு
பயிற்சிக்குப் பின்னர் மருத்துவ அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் தலையிட தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயிற்சிக்குப் பிந்திய நியமனங்கள் என்று அழைக்கப்படும் மருத்துவ சேவையின் முதன்மை நிலைக்கு 1,402 மருத்துவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆட்சேர்ப்பு ஆவணத்திற்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆட்சேபனை ஆதாரமற்றது என்று விஜயமுனி வலியுறுத்தியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
முன்னதாக, சட்ட நடைமுறைகளை மீறி பயிற்சிக்குப் பிந்திய நியமனப் பட்டியலை அமைச்சகம் தயாரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் பேச்சாளர் சமில் விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் பேச்சாளர் சமில் விஜேசிங்க எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
