கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள அடையாளம் தெரியாத மர்ம பொருள்
கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீனா அதிருப்தி
இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம்சாட்டியிருந்து.
அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க வான் பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், "அடையாளம் தெரியாத மர்ம பொருள்" கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனேடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.