களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று கிடப்பதை
அவதானித்து இது தொடர்பில் கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கிராமசேவகர் ஸ்தலத்திற்கு உடன் விரைந்து சடலத்தைப் பார்வையிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட உள்ளதாகவும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
