குருநாகலில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
குருநாகல் - நிகவரட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஸ்மியாகார பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிகவரட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (05.09.2023) பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
40 முதல் 45 வயது மதிக்கத்தக்க சுமார் 05 அடி மெல்லிய உடலுடன் கூடிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நிகவரட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நிகவரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
