மீண்டும் எரிபொருளுக்கான QR முறை: கஞ்சன விஜேசேகர - செய்திகளின் தொகுப்பு
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை 'QR' முறை எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக நடைமுறைப்படுத்துவதே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது நிலவி வந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு....