கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சி- வெற்றிலைகேணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் இன்றையதினம்(2) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 360 மில்லி மீட்டர் அளவிலான மூன்று குண்டுகளும் அமுக்க வெடி ஒன்றும் இனங் காணப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்றையதினம் தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை துப்புரவு செய்த பொழுது மண்ணுள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிப்பொருட்களை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, காணி உரிமையாளர் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியினை பெற்ற பின்னர் செயலிழக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
