கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட குண்டுகள்
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டி உள்ளார்.
வெடிக்காத குண்டுகள்
அப்பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்
அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri