புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அசமந்தப் போக்கு : வணிகர்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை கடைத்தொகுதியினை ஏலத்தில் வசதி படைத்தவர்களுக்கு வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட உள்ளுர் சிறு வணிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வாடகை செலுத்தி வந்த உள்ளுர் வணிகர்களை புறக்கணித்துவிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொது சந்தையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறு வணிகர்கள் வணிக நிலையம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் வணிக நிலையங்கள் மூன்றினை அபிவிருத்தி செய்து தருவதாக கூறி தற்போது சந்தை வணிகத்துடன் சம்மந்தப்படாத பெரும் வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு ஏலத்தில் விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பல தசாப்தங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
“போரால் பாதிக்கப்பட்ட நிலையில் பல தசாப்தங்களாக சந்தையில் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வரும் குடும்ப பெண் ஒருவர் எந்த வணிக நிலையமும் அற்ற நிலையில் வியாபாரம் செய்து வருகின்றார்.
இரண்டு புடவை வியாபாரிகளும் வியாபாரம் வீழ்ச்சி கண்ட நிலையில் தகரக்கொட்டகைளில் சந்தை வளாகத்தில் வைத்து வணிகம் செய்து வருகின்றார்கள்.
இருப்பினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான வருமானத்தினை, மக்களின் வரிப்பணத்தினை பெற்றுக் கொடுக்கும் சந்தைகளில் ஒன்றாக புதுக்குடியிருப்பு சந்தை காணப்படுகின்றது.
சந்தைக்குள் சுமார் 20 வரையான சிறுதொழில் முயற்சியாளர்கள் வணிக நிலையங்கள் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களிடம் மாதாந்த வாடகையினை பிரதேச சபை பெற்று வருகின்றது.
சிறு வியாபாரிகள்
இந்நிலையில். புதிதாக கட்டப்பட்ட மூன்று கடைகளையும் தலா 17 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளமை சிறு வியாபாரிகளின் வியாபாரத்தில் வீழ்ச்சியினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி என ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியினை பெற்று போரால் பாதிக்கப்பட்ட வணிகர்களை மேலும் பாதிக்க செய்யும் செயற்பாடாக இது அமைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சந்தை வணிகர்களால் சம்மந்தப்பட்ட திணைக்களம் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
