வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு ஆளுநரிடம் முன்வைக்கும் கோரிக்கை
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர மற்றும் 2024 ஓகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கு இடையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (27) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
அங்கு சென்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்துள்ளதுடன் அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, இந்த பரீட்சை பெறுபேறுகள் எதிர்கால ஆட்சேர்ப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
நிரந்தர தீர்வு
அத்தகைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நிரந்தர தீர்வை தங்களால் வழங்க முடியாது என்றும், அவர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்த நியமனங்களில் பல தரப்பினர் ஆர்வமாக இருப்பதால், அனைவருக்கும் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
மேலும், நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பிரச்சினைகளை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri