அபிவிருத்தி செய்யப்படாத முகமாலை கிராமம்: அவதியுறும் மீள் குடியேற்றப்பட்ட மக்கள்(Photo)
முகமாலை கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் பல்வேறு
சிரமங்களை எதிர்கொள்வதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை கிராமமானது யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.
மீள் குடியேற்றம்
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இறுதியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஒரு பகுதியாகவும் இது காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் மீள் குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் இதுவரை வழங்கப்படாத அதேவேளை, பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இருப்பினும், குறித்த வேலைத்திட்டங்கள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிராம மக்களின் பிரச்சினைகள்
இந்த கிராமத்தின் வடிகால்கள் சீர் செய்யப்படவில்லை எனவும் இதனால் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் கிராம அபிவிருத்தி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் காணப்படுகின்ற கோவானைக்குளம், முகமாலை குளம் மற்றும் வண்ணாந்துறை குளம் என்பன கடந்த 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இந்த குளங்களை புனரமைத்து தருவதன் மூலம் பிரதேச மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புகளை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முகமாலை பிரதேசத்திலே
மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு இதுவரை வெடி
பொருள் ஆபத்ததுக்களிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் தற்போது வெடிபொருட்களை
அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
