தேர்தல் களத்தில் பணம் செலவிடும் பாதாள உலகக்குழுத்தலைவர்கள்
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக பல கோடி ரூபா பணத்தை செலவிடத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு நெருக்கமான அரசியல்வாதி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெறச்செய்யும் நோக்கில் இவ்வாறு பணம் செலவிடப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிகப்பு பிடிவிராந்து உத்தரவு
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு சிகப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்கள் மீளவும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவதினை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பணம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்கு நெருக்கமான ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நியமித்துக்கொள்ளும் நோக்கில் பாதாள உலகக்குழுத் தலைவர்கள் பணம் செலவிடுவதாக கூறப்படுகின்றது.
பாதாள உலகக் குழுத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் சில அரசியல்வாதிகள் ஊடாக பிரசாரத்திற்காக பணம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |