சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இலங்கையர் டுபாயில் திடீர் கைது
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான கமகே சாரங்க பிரதீப் எனப்படும் வெல்லே சாரங்க டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பினை ஏற்கனவே பிறப்பித்திருந்தனர்.
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் சாரங்க தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுட்டுக் கொலை
கடந்த ஆண்டு முகத்துவாரம் லெல்லேமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடனும் சாரங்கவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட சாரங்கவின் மைத்துனரான இறைச்சி வியாபாரியான உக்குவா என்பவர் மஹாபாகே பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
