ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் புதிய மின்திட்டம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நுகேகொட நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிலத்தடி மின்சார திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிரதான மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
1930 களில் பிரித்தானிய ஆட்சியின் போது செயற்படுத்தப்பட்ட கொழும்பு மற்றும் காலி கோட்டை நிலத்தடி மின்சார திட்டங்களுக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நிலத்தடி மின்சார திட்டமாக இத்திட்டம் காணப்படுகிறது.
இதன் மூலம் நுகேகொட நகரில் நிர்மாண மற்றும் மரநடுகை நடவடிக்கைகளுக்கான பெரும்பாலான தடைகள் நீங்குவதுடன் மின்கம்பங்களினால் ஏற்படும் தடைகள், மற்றும் வாகன விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
நிலத்தடி மின் அமைப்பால், மின்வெட்டு மிகக் குறைவாகவும், பராமரிப்பு பணிகள் குறைவதால் அரசுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.
மேலும், இது ஒரு முன்னோடித் திட்டம் என்றாலும், நவீன உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நமது நாட்டின் தேவைக்கேற்ப நவீன உலகத்தின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சார தனியார் நிறுவனமான LECO நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் கோட்டை , நுகேகொட மற்றும் களனி பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Nugegoda City underground electricity cabling project was connected to the grid yesterday. The project implemented by LECO is the first such project constructed in SL after the Colombo City & Galle Fort underground cabling projects implemented during the British rule in 1930’s.… pic.twitter.com/yfWRBHKKwa
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 8, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |