அரசாங்கத்தை கவிழ்க்க செலவிடப்படும் பெருந்தொகை பணம்! ஜனாதிபதியின் தகவல்
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பெருந்தொகை பணம் செலவிடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இவ்வாறு பணத்தை செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் சுமார் 3500 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளும், 300 கிலோகிராம் கொகேய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரி56 ரக துப்பாக்கிகள் 93 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பெருந்தொகை பணம் செலவிடல்

அரசாங்கத்தினை கவிழ்க்கும் நோக்கில் சில போராட்டங்கள், சில எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடகங்களுக்கு பெருந்தொகை பணம் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில யூடியுப் தளங்களுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தை செலவிடுவதாகவும் அரசாங்கத்தை கவிழ்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி நாட்டிலிருந்து போதைப் பொருளை முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri