புலனாய்வாளர்களின் அதிரடி நடவடிக்கை.. 25 கோடி ரூபா சொத்து பறிமுதல்
தென் பகுதியின் பிரபல பாதாள குழுத் தலைவர் 'தெய்பாலே' என்பவரின் 25 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைகள் பிரிவு அறிவித்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைகள் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று (26.11.2025) தென் பகுதிக்கு விஜயம் செய்து அவரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பட்டபெந்தி மத்துமகே செயான் சத்சர என்றழைப்படும் 'தெய்பாலே'என்ற தென் பகுதியில் பிரபல பாதாள குழுத் தலைவர் என்பதோடு பாரிய போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்.
சொத்துக்களின் பெறுமதி
இவர் வெளிநாட்டில் ஒளிந்திருந்து கொண்டு இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு பாரியளவில் போதை பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் பிரதான சூத்திரதாரியாவார்.

அண்மையில் தென் பகுதியில் பிடிப்பட்ட கிலோ கணக்கிலான போதை பெருட்கள் அவர் அனுப்பியதாகவே பொலிஸார் சந்தேகின்றனர்.திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான நவீன் வீடு மற்றும் காணி,05 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |