ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கு தொடர்பில் வெளியான தகவல்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று முதல் தொடர்ச்சியாக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தொடுக்கப்பட்டது. ஆனால் அதன் குற்றப்பத்திரிகைகளை வாசித்து முடிப்பதற்கு 2023ஆம் ஆண்டு பெப்ரவரி வரை காலம் எடுத்துள்ளது.
குறித்த வழக்கு 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சட்டமா அதிபரால் 23, 270 குற்றச்சாட்டுகளுடன் 25 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள்
அன்றைய நிலையில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் இன்றைய நிலையில் நீதிபதிகள் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

நீதிபதி நவரத்தின் மாரசிங்க தலைமையிலான குழுவே வழக்கை இன்று விசாரணை செய்கிறது.
இவர் இந்த வழக்கு தொடரப்பட்ட காலத்தில் இருந்து இருக்கிறார். இந்த 25 குற்றவாளிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 23,270 முறைப்பாடுகளையும் ஒவ்வொருவருக்கும் வாசித்து காட்டவேண்டியிருந்தால் அதற்கே மூன்று வருடங்கள் கடந்திருக்கும்.
எட்டப்பட்ட உடன்பாடு
அதனால் இந்த வழக்கில் தொடர்புபட்டிருந்த அனைவரும் இணைந்து இந்த குற்றச்சாட்டுகளை சுருக்கி தெரிவிப்பதற்கான ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு குற்றவாளிகள் 25 பேருக்கும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் வாசித்து காட்டப்பட்டுள்ளது.
இது வரை 60 பேர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் ஒருவர் மரணமடைந்த நிலையில் 24 பேர் உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |