11 ஆண்டு போராட்டத்தின் பின்னர் கிடைத்த நீதி
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த போது, மரணித்த யுவதியின் குடும்பத்திற்கு 11 ஆண்டுகளின் பின்னர் இழப்பீடு வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் 5, அன்று, கட்டுநாயக்க நெக்ஸ்ட் தொழிற்சாலையில் 350 தொழிலாளர்கள் மதிய உணவுக்குப் பின்னர் நோய்வாய்ப்பட்டனர்.
உணவில் ஏற்பட்ட விசம்
இவர்களில் 150 பேர் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஏழு ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணிபுரிந்த யுவதியான ஞானவதியின் உயிர் பறிப்போனது.
தோண்டி எடுக்கப்பட்ட சடலம்
மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் ஆரம்பத்தில் அவரது மரணம் இரத்த உறைவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொழிற்சங்கங்கள் இதை மறுத்தனர். மறு பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது குடலில் ஏற்பட்ட வீக்கம் உணவு விஷத்தின் தெளிவான சான்றாக மாறியது. அதற்கான வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இறுதியாக தொழிலாளர் இழப்பீட்டு ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டது.
2025 ஒக்டோபர் 27, திகதி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது உண்மை மற்றும் நீதிக்கான 11 ஆண்டுகள் மற்றும் 52 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னரே, ஞானவதியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |