இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்
இந்த ஆண்டின் (2025) முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
குறித்த விடயத்தினை ஏற்றுமதி மேம்பாட்டு சபை (Export Development Board) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி 6.0 சதவீதம் கணிசமாக வளர்ச்சியடைந்து, நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றது.

ஏற்றுமதி வருவாய்
இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு (2025) மொத்த ஏற்றுமதி வருவாய் 14433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |