ஊழியர் சேமலாப நிதியத்தில் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம்
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது
பொதுமக்களுக்கு திறமையான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் இணைய சேவைகள் அல்லது கையடக்க தொலைப்பேசி குறுஞ்செய்தி மூலம் ஊழியர் சேமலாப நிதியக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெறக்கூடிய ஒரு அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு தனித்தனி தரவு அமைப்புகள்
2000 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியத்தின் தகவல் அமைப்பின் வளர்ச்சி தொடங்கியதிலிருந்து, அது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்றவாறு நவீனமயமாக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் தொழிலாளர் துறையின் இரண்டு தனித்தனி தரவு அமைப்புகள் காரணமாக எழும் பல்வேறு சிரமங்கள் காரணமாக, இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் இரண்டு அமைப்புகளையும் இணைத்து மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் மயமாக்கல் முறை பல அடிப்படை கூறுகளின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் அனில் ஜெயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |