பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 16 வயது சிறுமிகள்
இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட (ஒப்புதல் இன்றி )சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் வெளிக்காட்டுகின்றன
இதன்படி 2019ஆம் ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டில் 18 வீதத்தால் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று இலங்கையின் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
புள்ளிவிபரப்படி 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் 9 வீதத்தாலும், அதிகரித்துள்ளன.
2019 ஆம் ஆண்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மத்தியில் (ஒப்புதல் இல்லாமல்) 305 வன்புணர்வு சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு, இது 361 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, 2017 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, கடுமையான பாலியல் குற்றங்கள் என்பனவே அதிகரித்துள்ளன.