முல்லைத்தீவில் முழுமைப்படுத்தப்படாத பாலத்தின் பணிகள்!
முல்லைத்தீவில்(Mullaitivu) உள்ள பாலமொன்றின் கட்டுமானப்பணிகள் இதுவரை முழுமைப்படுத்தப்படாத நிலையில் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
நீண்ட நாட்களாக தொடரும் இந்த பாலத்தின் பணிகள் இதுவரையிலும் முழுமைப்படுத்தப்படாது இருப்பதால் மக்களின் அப்பாதை ஊடான போக்குவரத்து பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நடந்து வருகிறது.
விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இப்பாதை தொடர்பில் அவர்களிடையே அதிருப்தி நிலை இருப்பதையும் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுக்குளம் பாதை
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் ஒட்டுசுட்டான் - புதுக்குளத்திற்கான பாதைகளில் ஒன்றின் பாலமே கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாது இருந்து வருகின்றது.

அதனூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பாலத்திற்கு கீழாக உள்ள நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தின் கட்டுமானத்தை ஒப்பந்தம் செய்து உடன்பட்டவர்களின் பொறுப்பில்லாத இயல்பினால் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பொதுப் போக்குவரத்து பாதைகளின் புனரமைப்புக்களை விரைவுபடுத்தும் போதுதான் அவற்றின் பயன்களை பொதுமக்களால் உச்சளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த பாதையை பயன்படுத்துவோர் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri