வேலணையில் வகை தொகையாக கட்டப்படும் அனுமதியற்ற கட்டடங்கள் - முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி தனி நபர்களால் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை வகைதொகை இன்றி அதிகரித்துச் சென்றுகொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பிரதேச சபையும் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பிரதேச சபையின் ஒரு சில உறுப்பினர்களும் பின்னணியில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இடையூறு விளைவிப்பு
பிரதேச சபையின் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினாலும் அவர்களுக்கு இடையூறாக உறுப்பினர்கள் ஒரு சிலர் செயற்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கின் ஆளுநர் பிரதேச சபைகளின் வரி அறவீடுகளால் வருமானங்களை அதிகரிக்கவும் சட்டவிரோத கட்டுமாணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு வரிக்கு வரி கூறிவருகின்றார்.
ஆனால் இங்கு சந்தைகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு வருமான ஈட்டல்கள் ஒருசிலரது நலன்களுக்காக தடுக்கப்பட்டு வருவது போல தற்போது கட்டுமானங்களின் வரி வருவாயும் சட்டவிரோத செயற்பாட்டால் இல்லாது போகின்றது.
ஒரு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் வருமான வரி அறவீடே அப்பிரதேச சபையின் அபிவிருத்தி சார் வளர்ச்சியாக இருக்கின்றது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri