ஹமாஸ் அமைப்பினால் பாலியல் சித்திரவதைக்குள்ளான இஸ்ரேலிய பெண்கள்
ஹமாஸ் அமைப்பினால் பயண கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை பாலியல் வன்முறைக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் பிரமிளா பாட்டன் முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரமிளா பாட்டன் தலைமையிலான குழு கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம்
பணயக்கைதிகளை ஹமாஸ் பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்தமையாக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக சிறப்புத் தூதர் பிரமிளா பாட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தாக்குதல்களின் போது தங்கள் போராளிகள் பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹமாஸ் மீண்டும் மறுத்துள்ளது .
கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வலிந்த தாக்குதலில் சுமார் 250 பேர் பிணைபிடிக்கப்பட்டனர். அவர்களை காஸாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம்
இதேவேளை, பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த நிறுவனம் அதிகக் காலம் எடுத்துள்ளதாக இஸ்ரேலிய குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா நாடுகள் சபை 450க்கும் அதிகமான ஹமாஸ் உறுப்பினர்களை வேலையில் சேர்த்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றஞ்சாட்டியது.
ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான உதவி அமைப்பில் ஹமாஸையும் மற்ற ஆயுதக் குழுக்களையும் சேர்ந்தவர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.