நாகசாகி அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர வேண்டும்: ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து
ஜப்பானின் நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து உயிர் தப்பியவர்களையும் உலகம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டு 81 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு
மனிதகுலத்தின் பேரழிவு
81 வருடங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் பேரழிவுத் திறனுக்கான அடையாளமாக நாகசாகி மாறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நாகசாகி நகரம் ஒரு எச்சரிக்கையாகவும் சான்றாகவும் நிற்பதாகத் தெரிவித்த அவர், அச்சத்தின் மூலம் அல்லாமல், பொதுவான இலக்குகளின் மூலமே அமைதியைப் பாதுகாக்கும் உலகைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிரோஷிமா மீதான தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 9 ஆம் திகதி அமெரிக்காவினால் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டது.
இத்தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், சில நாட்களின் பின்னர் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.