ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய பேச்சு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது.
கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, நேற்று(26) காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை யாழ்ப்பாணம் - தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள்
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்), பொ.ஐங்கரநேசன் (தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும்), தருமலிங்கம் சுரேஷ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்), நடராஜர் காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன என்று தெரியவருகிறது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam