அரசாங்கம் புலிகளின் தேவையை நிறைவேற்றுகின்றதா! சரத் வீரசேகர சீற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் தேவையை நிறைவேற்றுகின்றதா? என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது விவகாரம் தொடர்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது யாரின் தேவைக்காக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சுமார் ஐந்து ஆணைக்குழு விசாரணைகளில் எந்த இடத்திலும் சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் தொடர்பில் தகவல் வழங்கிய சாலேவை கைது செய்து துன்புறுத்துவதாகவும் எனினும் சஹ்ரான் உரிய நேரத்தில் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னரும் தாக்குதல் நடத்தப்பட்ட தினம் காலையிலும் சஹ்ரான் குறித்து வழங்கப்பட்ட தகவல் உதாசீனம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உலகின் முதனிலை புலனாய்வு பிரிவுகளான எஸ்பிஐ, ஸ்காட்லேண்ட்யார்ட், அவுஸ்திரேலியா புலனாய்வு பிரிவு இன் உள்ளிட்ட பல முக்கிய புலனாய்வு பிரிவுகள் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கைகள் எதிலும் சுரேஷ் சாலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பிலான மூன்றாவது சந்தேக நபராக சலே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு முன்னர் நடைபெற்ற எந்த ஒரு விசாரணைகளிலும் சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
துர்நாற்றம் வீசக்கூடிய கழிப்பறை ஒன்றிற்கு அருகாமையில் சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஆரோக்கியமாக இருந்த நபர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கைதின் பின்னர் அவர் நோய் வாய் பட்டுள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு முக்கிய பங்காற்றிய சுரேஷ் சாலேவை கைது செய்து துன்புறுத்துவது புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்தி படுத்தும் நோக்கிலா என சரத் வீரசேகர அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam