ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா அமர்வுகள்! இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்காவில் நடந்த சந்திப்புக்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சந்திப்புக்கள் கடந்த வாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவையின் குழுவினர் வோசிங்டனில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலக தமிழர் பேரவை
இந்த சந்திப்பின் பின்னர் தெற்காசியாவில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று லு பின்னர் ட்வீட் செய்தார்.
இந்த நிலையில் உலக தமிழர் பேரவை தூதுக்குழு, அமெரிக்காவின் குற்றவியல் நீதிக்கான தூதர் பெத் வான் ஷாக்கையும் சந்தித்தது.
அத்துடன் நீண்ட கால தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
