மனிதவுரிமை சபை நடுநிலையானது என இனியும் பாசாங்கு செய்ய முடியுமா : ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thileepan Mar 30, 2023 02:02 PM GMT
Report

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானது என ஐ.நா மனிதவுரிமை சபையானது இனியும் பாசாங்கு செய்ய முடியுமா? என ஐ.நாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனிதவுரிமை சபையின் 52 ஆவது அமர்வில் விடயம் எட்டு தொடர்பான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30.03.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனிதவுரிமை சபை நடுநிலையானது என இனியும் பாசாங்கு செய்ய முடியுமா : ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி | Un Human Rights Council Continue To Pretend Lanka

வியன்னா பிரகடனம்

திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னா பிரகடனத்தின் 62 ஆவது பந்தியில் வலிந்து காணாமற் போகச் செய்தலை தடுப்பதற்கும் அவ்வாறான செயலைச் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமாக  வினைத்திறன் மிக்க சட்டரீதியான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

நாடுகள் தமது ஆட்புல எல்லைக்குள் இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்புவதற்கு இடமிருக்கும் போது, அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அந்நாடுகளின் கடமை என்பதனையும் இக்குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் அப்பிரகடனம் மீள வலியுறுத்துகிறது.

மனிதவுரிமை சபை நடுநிலையானது என இனியும் பாசாங்கு செய்ய முடியுமா : ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி | Un Human Rights Council Continue To Pretend Lanka

இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு

இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைவின் மனிதவுரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்புகளான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியற்கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரையும் சந்தித்தனர்.

இச்சந்திப்புகளின் போது மேற்குறித்த 62 ஆவது பந்தியில் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு மாறாக  பழையவற்றை மறந்து விடுமாறும் பொறுப்புகூறலை வலியுறுத்த வேண்டாம் எனவும் முன்னைய குற்றச்செயல்கள் பற்றிய விடயங்களை இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கையாளும் எனவும் தாம் சந்தித்தவர்களிடம் பரப்புரையில் ஈடுபட்டதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறை

பாதிக்கப்பட்டவர்களும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இவ்வாலோசனைகளை நிராகரித்து சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்திய போது இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மனிதவுரிமை சபை நடுநிலையானது என இனியும் பாசாங்கு செய்ய முடியுமா : ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி | Un Human Rights Council Continue To Pretend Lanka

மேற்படி ஆணைக்குழு தனது களப்பயணத்தை முடித்துக் கொண்டு வெளியிட்ட அறிக்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற உள்ளகப் பொறிமுறையினை அமைப்பதற்கு தாம் சந்தித்த பாதிக்கப்பட்ட தரப்புகள் இணங்கிக் கொண்டதாக தவறாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல தவறான தகவல்கள் அவ்வறிக்கையில் காணப்படுகிறது.

இந்நிலையில் இலங்கைவின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானது என ஐ.நா. மனிதவுரிமைச் சபையானது இனியும் பாசாங்கு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US