ஐ.நா பிரதிநிதிகள் குழு சிவில் சமூக தரப்பினருடன் விசேட கலந்துரையாடல்(Photo)
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் சிவில் சமூக தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினரை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
விசேட சந்திப்பு
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
