யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது: பொலிஸ் மா அதிபர்
யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
முல்லேரியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் நோக்கில் ஏழு மாதங்களுக்கு முன்னதாக யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பாதாள உலகக்குழு செயற்பாடுகள்
பாதாள உலகக்குழு செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களும் பல்வேறு வழிகளில் சவால்களை கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சவால்களுக்கு அஞ்சப் போவதில்லை என, பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதன் மூலம் யுக்திய நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படும் வரையில் ஓயப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |