உக்ரைன்- ரஷ்யா போர் இறுதியில் இப்படித்தான் முடியும்! கனடா எதிர்வுகூறல்
உக்ரைன்- ரஷ்யா போர் இறுதியில் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும்.
சமாதான பேச்சுவார்த்தை
உக்ரைனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோ கூட்டுப் படையும் ஆதரவு வழங்க வேண்டும்.
உலகின் ஏனைய போர்களை போலவே இந்த போரும் சமாதான பேச்சுவார்த்தைகளின் ஊடாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவரை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை மேசையில் உக்ரைன் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |