உக்ரைனுக்கு வந்து குவிய போகும் ஆயுதங்கள்! அமெரிக்கா அறிவிப்பு-உலக செய்திகள்
உக்ரைனுக்கு 250 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய இராணுவ உதவி வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கமைய AIM-9M விமான எதிர்ப்பு ஏவுகணைகள், HIMARS ஏவுகணைகள், 155 மி.மீ மற்றும் 105 மி.மீ ஆட்லறி செல்கள், கண்ணிவெடி அகற்றும் கருவிகள், ஜவ்லின்ஸ் மற்றும் பிற தாங்கி எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் என்பன வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிய ஆயுதங்கள், தடைகளைத் துடைப்பதற்கான வெடிகுண்டுகள், உதிரிப் பாகங்கள், சேவைகள், பயிற்சி மற்றும் போக்குவரத்துக்கான நிதியுதவி ஆகியவற்றிற்கான மூன்று மில்லியனுக்கும் அதிகமான வெடிமருந்துகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,