பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் உக்ரைன்! தாக்குதல் தீவிரமடையும் என்கிறது ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
இந்நிலையில், போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்வராததால் தாக்குதல் தீவிரமடையும் எனவு ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.