ட்ரம்பின் பதிவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்..!
உக்ரைனுக்கும் (Ukraine) ரஷ்யாவுக்கும் (Russia) இடையில் போர் தொடங்கியதில் இருந்து 43,000 உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donalt Trump), தனது சமூக வலைதள பக்கம் ஒன்றில், ரஷ்ய - உக்ரேனிய போரில் 6,00,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், உக்ரைன் வீரர்களின் இழப்பு 4,00,000 எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் தனது பதிவில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
இந்நிலையில், குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை உக்ரேனிய ஜனாதிபதி மறுத்துள்ளதுடன், உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, 43,000 உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3,70,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒரே வீரர்கள் பல முறை காயமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செலன்ஸ்கி, 1,98,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 5,50,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |