உக்ரைன் பங்கேற்காத பேச்சுவார்த்தையின் முடிவை ஏற்க மறுக்கும் ஜெலென்ஸ்கி
சவுதி அரேபியாவில்(Saudi Arabia) நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ரஸ்ய - உக்ரைன் போர் 3ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் இப்போரை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ரஸ்ய - உக்ரைன் போர்
இது தொடர்பாக ரஸ்ய ஜனாதிபதி புடின்(Viladimir Putin), உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஸ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை
எனினும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை.
இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
இந்தநிலையில், துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி,
அமெரிக்கா-ரஸ்யா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துள்ளதாவது, “சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும்.
எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது.
ரஸ்ய ஜனாதிபதி புடின்
சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் ரஸ்ய ஜனாதிபதி புடினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
