1000 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி ரஷ்ய பாலத்தை தகர்த்த உக்ரைன்
ட்ரோன்களை அனுப்பி, ரஷ்யாவின் 30 போர் விமானங்களை தகர்த்த உக்ரைன், அடுத்த நடவடிக்கையாக, ரஷ்யாவின் முக்கிய பாலத்தை குண்டுகள் வைத்து தகர்த்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, போர்நிறுத்த பேச்சுகள் தோல்வி அடைந்த நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைனின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைனிடம் இருந்து, 2014இல் ரஷ்யா கைப்பற்றிய, கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும், 12கிலோ மீட்டர் துார பிரமாண்ட பாலம் தகர்க்கப்பட்டுள்ளது.
கிரீமியன் பாலம் என்றும் கெர்ச் பாலம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இதில், ஒரு பக்கம் தொடருந்து போக்குவரத்துக்கும், மறுபக்கத்தில் வீதி போக்குவரத்தும் இடம்பெற்று வந்தது.
1,100 கிலோ வெடிப் பொருட்கள்
இந்த நிலையில், நீருக்கடியில், பாலத்தின் துாண்களின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை இயக்கி, உக்ரைனின் உளவு அமைப்பான, எஸ்.பி.யு., நேற்று தாக்குதல் நடத்தியது.

இதில், பாலத்தின் பெரும்பகுதி தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த, ஒரு மாதமாக திட்டமிட்டு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, எப்.பி.யு., கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு, 1,100 கிலோ எடையுள்ள வெடிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam